சென்னையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரும் நபர்கள் சென்னை முதல் கேரளா வரை இ-பாஸ் ஒப்புதல் பெற்று வருகின்றனர். இவர்கள் கேரளா செல்வதாக கருதி சோதனைச் சாவடியில் சளி பரிசோதனை மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் உண்மையில் இவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால் நோய்த் தொற்று இருக்கும் சூழ்நிலையில் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட காரணமாகி விடுகின்றனர். சரியான இருப்பிட ஆவணங்கள் அடிப்படையில் இ-பாஸ் பெற்று வருமாறு பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே தொடர்ந்து வலியுறுத்துவது போல் சென்னை உள்ளிட்ட வெளியிடங்களிலிருந்து வருபவர்கள் தங்கள் பகுதிக்கு வந்திருப்பதாக பொதுமக்கள் அறிந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண் 1077-ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தகவல் தெரிவிப்பவர்கள் குறித்து விபரம் வெளியிடப்பட மாட்டாது
சென்னையிலிருந்து இ-பாஸ் இல்லாமல் அஞ்சுகிராமம் வரை வந்து பின்னர் உள்ளூர் ஆட்டோவில் மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற நான்கு பேர் கண்டறியப்பட்டது. ஆட்டோ ஓட்டி வந்த லெவிஞ்சிபுரம் சாலைப்புதூர் கணேசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரது ஆட்டோ எண் TN74 P 0183 பறிமுதல் செய்யப்பட்டது.
முககவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 278 பேருக்கு இன்று அபராதமாக ரூபாய் 27800 வசூலிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், களபணியாளர்கள் மூலமாகவும், சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 33580 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 76 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 110 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 725 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 9118 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் மொத்தத்தில் இதுவரை 8404 வழக்குகள், 6254 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
0 Comments