திருநங்கைகளுக்கும் பேருந்தில் இலவசமாக பயணம் செய்திட அனுமதிக்க வேண்டும். நாகரில். தமிழக அரசிற்கு கோரிக்கை எழுப்பிய திருநங்கைகள்.

திருநங்கைகளுக்கும் பேருந்தில் இலவசமாக பயணம் செய்திட அனுமதிக்க வேண்டும். நாகரில். தமிழக அரசிற்கு கோரிக்கை எழுப்பிய திருநங்கைகள்.

in News / Local

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டா லின் நேற்று ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு ஆணை வெளியிட்டார்.இதில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்றும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் உள்ள டவுண் பஸ்களில் பெண்களின் இலவச பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.அதை தொடர்ந்து குமரி மாவட்டம் முழுவதும் 444டவுண் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் 288 பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க வழிவகைகள் செய்யப்பட்டு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்ற ஸ்டிக்கர் ஒட்டி குமரி மாவட்டம் முழுவதும் அனைத்து பணிமனைகளில் இருந்தும் பேருந்துகள் வெளிவந்தது.அதன் பிறகு ஒவ்வொரு பேருந்து நிறுத்ததிலும் பேருந்து நிலையத்திலும் பெண்கள் ஆனந்ததோடு பயணம் செய்ய தொடங்கினர்.

அதை போல் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மூன்றாம் பாலினத்தரை திருநங்கை என்று அழைக்க அரசாணை வெளீயிட்டார் எனவும், அதேப் போல் அவரது மகன் தமிழக முதலவர் ஸ்டாலின் எங்களுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் , குறிப்பாக பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு, தினசரி 8 கி.மீட்டர் நடந்து சென்று வருமானத்தை ஈட்டி வாழ்வாதாரத்தை காத்து வரும் திருநங்கைகளான நாங்கள் சமூகத்தில் குறைந்த அளவிலேயே இருப்பதால் அரசு எங்களுக்கும் பேருந்துகளில் இலவச பயண சலுகையை அறிவிக்க வேண்டும் என்றும் நாகர்கோவிலில் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top