மணவாளக்குறிச்சி அருகே ராணுவ விரரை தாக்கி இரண்டரை பவுன் நகை பறிப்பு.! 4-பேருக்கு போலீஸ் வலை வீச்சு;

மணவாளக்குறிச்சி அருகே ராணுவ விரரை தாக்கி இரண்டரை பவுன் நகை பறிப்பு.! 4-பேருக்கு போலீஸ் வலை வீச்சு;

in News / Local

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை சேர்ந்தவர் நடராஜன் மகன் ஜெகன் (36). இவர் பஞ்சாபில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார் .தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார் .

நேற்று முன்தினம் ஜெகன் வீட்டுக்கு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் அங்கு வந்த முகேஷ் (22), அபினேஷ் (22 )உட்பட 4 பேர் வந்து தகாத வார்த்தையில் பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதை ராணுவ வீரர் ஜெகன் தடடிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாலுபேரும் அருகில் கிடந்த கல் மரக்கட்டையால் ஜெகனை தாக்கியுள்ளனர். அப்போது திடீரென அவர்கள் ஜெகனின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். சுதாகரித்துக் கொண்ட ஜெகன் சங்கிலியைப் பிடித்துக் கொண்டார் .

இதில் இரண்டு துண்டாக செயின் அறுந்துள்ளது.ஒரு பாதி ஜெகன் கையில் கிடைத்துள்ளது.மற்றொரு பாதியை பறித்துக்கொண்டு உடனே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த ஜெகன் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகார் மணவாளக்குறிச்சி போலீசார் அளித்த புகாரில் முகேஷ் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top