கோவை பெண்ணுடன் கேப்டன் மகன் நிச்சயதார்த்தம்!

கோவை பெண்ணுடன் கேப்டன் மகன் நிச்சயதார்த்தம்!

in News / Local

பிரபல நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் மகனுக்கு கோவை பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததுள்ளது.

சினிமாவில் மட்டுமின்றில் அரசியல் கட்சியிலும் பிரபலமானவர் விஜயகாந்த், கேப்டன் என தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சைகளும் பெற்று வந்துள்ளார். இவருக்கு சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் சினிமாவில் நடிப்பதுடன், கட்சிக் கூட்டங்களிலும் அவ்வப்போது கலந்துகொள்வதுண்டு.

இந்த நிலையில், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஸ்டாம்ப்வெண்டர் இளங்கோவின் மகளுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்நிகழ்ச்சி மிக எளிமையாக நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top