முக்கடல் அணையில் தண்ணீர் தட்டுப்பாடு - சுற்றுவட்டார கிராமங்களில் வீணாகும் தண்ணீர்

முக்கடல் அணையில் தண்ணீர் தட்டுப்பாடு - சுற்றுவட்டார கிராமங்களில் வீணாகும் தண்ணீர்

in News / Local

நாகர்கோவில் மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம், கோடை வெயில் காரணமாக குறைந்து வருகிறது.இதன் காரணமாக அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு தண்ணீர் சரிவர விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம் காரணமாக சாலையில் ஒழுகிவரும் தண்ணீரை எடுத்து மக்கள் உபயோகப் படுத்தி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது..

மேலும், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் மற்றும் தெரிசனங்கோப்பு பகுதியிலிருந்து முக்கடல் அணை செல்லும் சாலையில் பல பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தெருக்களில் ஓடி யாருக்கும் உபயோகமற்று, வீணாகி வருகிறது. இதை சரி செய்வதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள படாமல் இருப்பதால், உடைப்பு ஏற்பட்டுள்ள தண்ணீர் குழாய்களை சரி செய்வது மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top