வடக்கு தாமரைகுளம் அருகே டாரஸ் லாரி மோதி பெண் பலி.!

வடக்கு தாமரைகுளம் அருகே டாரஸ் லாரி மோதி பெண் பலி.!

in News / Local

வடக்கு தாமரைகுளம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது டாரஸ்லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் பரிதாபமாக உயிர் இழந்தார்.

குமரி மாவட்டம் வடக்கு தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் இவரது மனைவி கிருஷ்ணம்மாள்( 53). இவர் இன்று காலை தனது சொந்தமான இரு சக்கர வாகனத்தில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிரே வந்த டாரஸ்வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் சென்ற கிருஷ்ணம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார் .இது குறித்து தென் தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top