சாமிதோப்பு அருகே பரிதாபம் சமையல் சரியில்லை என்று கணவன் சொன்னதால் மனைவி தூக்கு போட்டு தற்கொலை

சாமிதோப்பு அருகே பரிதாபம் சமையல் சரியில்லை என்று கணவன் சொன்னதால் மனைவி தூக்கு போட்டு தற்கொலை

in News / Local

சாமிதோப்பில் சமையல் சரியில்லை என்று கணவன் கூறியதால் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

சாமிதோப்பு மேலத்தெருவில் குடும்பத்தோடு வசித்து வருபவர் நாகராஜன் (28). இவரது மனைவி ஷிவானி (22). கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. நாகராஜன் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

ஷிவானி சமைக்கின்ற சமையல் நாகராஜனுக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு நாகராஜன் டூட்டிக்கு செல்வதற்காக சாப்பிட அமர்ந்துள்ளார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சமையல் சரியில்லை என்று கூறியுள்ளார். இதனால் ஷிவானி மன வருத்தம் அடைந்தார். கணவர் வேலைக்கு சென்றவுடன் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு ஷிவானி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆர்.டி.ஓ. விசாரணை.

இந்த சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தென்தாமரைகுளம் சப் இன்ஸ்பெக்டர் ஜாண் கென்னடி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நாகராஜனுக்கும் ஷிவானிக்கும் திருமணம் முடிந்து ஒன்றரை வருடங்கள் ஆவதால் அகஸ்தீஸ்வரம் வட்டார ஆர்.டி.ஓ. மயில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சாமிதோப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top