கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவை பாதை வழிபாடு

கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவை பாதை வழிபாடு

in News / Local

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது.

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்ததை, ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஒரு வாரம் புனித வாரமாக கொண்டாடப்படுகிறது. இதில் புனித வியாழன், புனித வெள்ளியும் அடங்கும்.

புனித வியாழனையொட்டி நேற்று முன்தினம் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் பாதம் கழுவுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதே போல் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்விடும் நாள் புனித வெள்ளியாகும். இந்நாளில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் நடைபெறும்.

அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களிலும் புனித வெள்ளி நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று காலை 11 மணி முதல் மாலை 2.30 மணி வரை நற்கருணை ஆராதனை, சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. பின்னர் மதியம் 3 மணிக்கு மேல் சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது.

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தில் நேற்று மாலை 6 மணிக்கு திருச்சிலுவை ஆராதனை, சிலுவைப்பாடு வழிபாடு நடைபெற்றது. ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கினார். இதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது. இரவு 9 மணிக்கு ஜெபம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோட்டார் மறைமாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர், மறைமாவட்ட செயலர் இமானுவேல், மறைவட்ட முதன்மை பணியாளர் மைக்கில் ஏஞ்சலூஸ், பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய சீலன் மற்றும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இன்று(சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஈஸ்டர் பண்டிகை தொடங்குவதால், அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு நள்ளிரவு வழிபாடு, சிறப்பு திருப்பலி நடைபெறும். 

 

 

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top