மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்த நிலையிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டம் நிறைவேறியதை தொடர்ந்து அதற்கு குடியரசு
தலைவரின் ஒப்புதலும் கிடைத்து சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தினர். அதற்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் போராட்ட களத்தில் குதித்தனர். இதற்கு பல பிரபலங்களும், பல்வேறு கட்சியை சார்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் சித்தார்த், குடியுரிமைக்கு எதிராக போராட மாணவர்களுக்கு முழு உரிமை உள்ளது என்றும் ஆனால், அதேசமயம் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியான முறையில் போராட வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் பேசினார்.
ஏற்கனவே, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவருடைய ஆட்சியிலேயே அவருக்கு எதிராக அதிமுகவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தொடர்பாக பல கருத்துக்களை ட்விட்டர் வாயிலாக தெரிவித்து வந்தார். இதற்கு பலர் ஆதரவு கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments