கல்யாண சௌகாந்திகம் என்கின்ற மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் 1996ஆம் ஆண்டில் அறிமுகமானவர் திவ்யா உன்னி. அதற்கு உன் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார் இவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வந்த இவர், டாக்டர் சுதிர் சேகர் என்பரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். அவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். திருமணமாகி 14 வருடங்கள் ஆன நிலையில், சுதிரின் நடவடிக்கையால் பிரிவு ஏற்பட்டது. திவ்யா உன்னி அமெரிக்காவில் நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இது அவரது முதல் கணவர் சுதிருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. கற்ற கலையை மறக்க முடியாது என திவ்யா பிடிவாதமாக கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனகசப்பு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு விவாகரத்து ஆனதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு திவ்யா கடந்த 2018ம் ஆண்டு அருண் என்கிற என்ஜினியரை திருமணம் செய்தார். அருண் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், மறுமணம் செய்து கொண்ட திவ்யா தற்போது, கர்ப்பமாக உள்ளார். அவருக்கு அங்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்ட புகைப்படங்களை திவ்யா உன்னி சமூக வலைதளங்களில் வெளியிட்டு மூன்றாவது முறை தாயாகியுள்ளது அற்புதமான உணர்வு என பதிவிட்டுள்ளார். புகைப்படங்களில் திவ்யா மிக மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், திவ்யாவுக்கு சுகப்பிரசவம் ஆகட்டும் என்று வாழ்த்தியுள்ளனர்.
0 Comments