பாகுபலி-2 சாதனையை முறியடித்த பிகில் வசூல்; 3 நாட்களில் ரூ.100 கோடி!

பாகுபலி-2 சாதனையை முறியடித்த பிகில் வசூல்; 3 நாட்களில் ரூ.100 கோடி!

in Entertainment / Movies

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் உலகளவில் மொத்த வசூலில் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது.

விஜய்-அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகியுள்ள படம் பிகில். 180 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. பெரும் எதிர்பார்ப்பு நிலவியதால், அதிக விலை கொடுத்து இதன் வெளியீட்டு உரிமைகள் வாங்கப்பட்டு உள்ளன.

தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்கிரீன் சீன் நிறுவனம் சுமார் 83 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தப் படம் வெளியானது.

ஆனால், இந்த படம் விமர்சன ரீதியாகக் கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியாகப் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தீபாவளி விடுமுறை நாட்கள் என்பதால் முக்கிய திரையரங்குகள் அனைத்திலுமே ஹவுஸ்புல் காட்சிகளாகவே திரையிடப்பட்டு வருகின்றன.

உலகளவில் மொத்த வசூலில் சுமார் ரூ.100 கோடியைக் கடந்து சாதனை புரிந்துள்ளது பிகில். அமெரிக்காவில் இதுவரை 940K டாலர்கள் வசூல் செய்துள்ளது. இன்றைய வசூலின் மூலம் 1 மில்லியன் டாலரைத் தொடும் என்பது உறுதியாகிறது. இங்கிலாந்தில் 2.31 கோடி ரூபாயும், ஆஸ்திரேலியாவில் 1.59 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. சென்னையில் மட்டும் வெள்ளிக்கிழமை - ரூ.1.79 கோடி, சனிக்கிழமை - ரூ.1.73 கோடி, ஞாயிற்றுக்கிழமை - ரூ.1.74 கோடி என மொத்தமாக இதுவரை ரூ.5.26 கோடி வசூல் செய்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி-2ன் முதல் வார இறுதியில் இந்த படம் ரூ.3.24 கோடியை வசூலித்து இருந்தது. இருப்பினும், பிரபாஸ் நடித்த இந்த படம் மொத்தம் ரூ.1799 கோடியை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் நடிப்பில் தெலுங்கில் வெளியான படங்களில் சாதனை புரிந்துள்ளது பிகில். மொத்தமாக ரூ.10.5 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் சில நாட்களில் இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றிய விநியோகஸ்தர்களுக்கு போட்ட பணம் திரும்ப வந்துவிடும். அடுத்த நாட்களில் வரும் வசூல் அனைத்தும் லாபமே. விஜய் படங்களுக்குத் தெலுங்கில் மட்டுமே மார்க்கெட் குறைவாக இருந்தது. இந்தப் படத்தின் மூலம் தெலுங்கிலும் வசூல் நடிகராக வலம்வரத் தொடங்கியுள்ளார் விஜய். கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் வசூல் சுமார் ரூ.10 கோடியைத் தாண்டியுள்ளது .

தமிழகத்தின் மொத்த வசூல் கடந்த மூன்று நாட்களில் மட்டுமே சுமார் 60 கோடி ரூபாயைத் தாண்டும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் எவ்வளவு தொகை என்பது தெரியவரும். மேற்கண்ட வசூல் கணக்குகளைக் கூட்டிப் பார்த்தால் உலகளவில் ரூ.100 கோடி வசூலை பிகில் படம் கடந்துள்ளது உறுதியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, படம் ரூ .30 கோடிக்கு மேல் வசூலித்து. மொத்தம் ரூ. 130 கோடியாக உள்ளது.

துப்பாக்கி' படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் நடித்த படங்கள் அனைத்து மொழிகளிலுமே நல்லபடியாக வசூல் செய்து வருகிறது. புலி, ஜில்லா மற்றும் தலைவா ஆகிய படங்களைத் தவிர்த்து இதர விஜய் படங்கள் அனைத்துமே 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய படங்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

கார்த்தியின் 'கைதி' நல்ல விமர்சனத்தை கொண்டு உள்ளதால் ஒரு நல்ல வசூலை கொண்டு வந்துள்ளது. குறைந்த தியேட்டர் என்பதால் சென்னையில் இந்த திரைப்படம் தொடக்க நாளில் ரூ.32 லட்சம் வசூலித்தது மற்றும் இரண்டாவது நாளில் ரூ.37 லட்சம் வசூலித்து. அதன் இரண்டு நாள் வசூலாக ரூ.69 லட்சத்தை வசூலித்து உள்ளது. மூன்று நாள் மொத்தம் ரூ.1.07 கோடி ரூபாயை வசூலித்து உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top