கவிஞர் வைரமுத்துவுக்கு கௌரவ பட்டம் வழங்கக்கூடிய நிகழ்ச்சியில் பங்கேற்பதை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தவிர்த்துள்ளார்.
சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் வரும், சனிக்கிழமை சிறப்பு பட்டமளிப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரபல தமிழ் கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு விருதுகளை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நிகழ்ச்சியில் பங்கேற்பதை ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வைரமுத்துவுக்கு பட்டம் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நாள் முதற்கொண்டு பல்வேறு சர்ச்சைகள் எழும்பின. கௌரவ பட்டம் அளிப்பதற்கு பலர் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.
ஏற்கனவே ஆண்டாள் தொடர்பாக சர்ச்சையான கருத்தை தெரிவித்து, தமிழக பாஜக தலைவர்கள் கடும் கண்டனங்களை பெற்றவர் வைரமுத்து, பின்னர், பின்னணி பாடகி சின்மயி உள்ளிட்டவர்களின் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கினார்.
கௌரவ பட்டம் வழங்குவது குறித்து பாடகி சின்மயி, தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த தகவல்களால் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்திருப்பதாக கூறப்படுகிறது
0 Comments