தமிழில் பிரபல காமெடி நடிகர்கள் வரிசையில் நடிகர் சதீஷும் ஒருவர். இவர் 8 வருடங்களாக கிரேசி மோகனிடம் உதிவியாளராக பணியாற்றியவர்.மெரினா,மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே,கத்தி ,கஜினிகாந்த் போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார்.அகில சூப்பர்ஸ்டார் சிவா உடன் தமிழ் படம்2 படத்தில் வில்லனாக நடித்தவர் சதிஷ்.
சிக்ஸர் படத்தை இயக்கிய சாச்சியின் சகோதரி சிந்துவுடன் காமெடி நடிகர் சதீஷ்க்கு நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜீவா, ராதாரவி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு சதீஷ் மற்றும் சிந்துவை வாழ்த்தினர்.
0 Comments