நடிகை காஜலுக்கு விரைவில் திருமணம்?.

நடிகை காஜலுக்கு விரைவில் திருமணம்?.

in Entertainment / Movies

திருமணத்திற்கு தயாராகி வருகிறார் நடிகை காஜல் அகர்வால். தான் காதலில் இருப்பதை ஒரு புகைப்படம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் என அவரது ரசிகர்கள் இணையதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் ஸ்டார் நடிகர்களுடன் தொடர்ந்து ஜோடிப் போட்டு, ஹிட் நடிகையாக வலம் வரும் இவர் இரண்டு திரையுலகிலும் அதிக ரசிகர்களை கொண்டிருக்கிறார். தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் காஜல், இந்தியன் 2 படத்திற்காக தற்காப்பு கலைகளையும் கற்று வருகிறார். இந்தியன் 2 படத்தை தவிர வேறு எந்த புதிய படத்திலும் இதுவரையில் காஜல் அகர்வால் ஒப்பந்தமாகவில்லை.

நீண்ட நாட்களாக, தனது தங்கைக்கு திருமணம் முடிந்தும், காஜல் அகர்வால் திருமணம் செய்துக் கொள்ளாமலேயே தவிர்த்து வந்தார். பேட்டிகளில், மனதுக்குப் பிடித்தவரைத் தேடிக் கொண்டிருப்பதாக சொல்லி காலம் கடத்தி வந்த காஜல் அகர்வால், தனது காதலருக்கும், இவருக்கும் ஜாதகப் பொருத்தம் சரியில்லை என்பதால் திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்ததாக தகவல்கள் வெளியாகின்றன.

இந்நிலையில், காளஸ்தி, திருப்பதி உட்பட பரிகார தலங்களிலும் நடிகை நயன்தாராவைப் போலவே காஜல் அகர்வாலும் சென்று பரிகாரப் பூஜைகளைச் செய்து வந்தார். இந்நிலையில், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதித்ததாகவும், விரைவில் காஜல் அகர்வால் தனது மனதுக்குப் பிடித்தவரை மணப்பதற்கு தயாராகிவிட்டார் என்றும் யூனிட் ஆட்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இந்நிலையில், தனது காதலரை கரம் பிடிப்பதற்காகவே புது பட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறார் காஜல் என்கிறார்கள். இந்தியன்2 திரைப்படம் நடிகர் கமலுக்கு மட்டுமில்லாமல், நடிகை காஜல் அகர்வாலுக்கும் கடைசிப் படமாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top