எஸ்.கே இயக்கத்தில் நடிக்க விரும்பும் கல்யாணி ப்ரியதர்ஷன்!

எஸ்.கே இயக்கத்தில் நடிக்க விரும்பும் கல்யாணி ப்ரியதர்ஷன்!

in Entertainment / Movies

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள ஹீரோ திரைப்படம் நாளை(டிசம்பர் 20) ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் கதாநாயகி கல்யாணி ப்ரியதர்ஷன் தனது சுவாரஸ்யமான ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஹீரோ திரைப்படம் மூலமாகத் கல்யாணி ப்ரியதர்ஷன் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். இந்தத் திரைப்படத்தில் மீரா என்னும் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். அதுகுறித்து அவர் பேசும் போது, ‘மீரா, மிகவும் முதிர்ச்சியான மனநிலை கொண்ட ஒரு பெண். எதையும் பேசுவதற்கும், செய்வதற்கும் முன்பாக பலமுறை யோசித்து அதன் பின்னரே, செய்பவர். நிஜ வாழ்க்கையில் நான் அதற்கு நேர் எதிரானவள். மனதில் ஒன்றை நினைத்தவுடன் அதை அப்படியே உளறி விடுவேன்’ என்று கூறினார். மேலும், ‘இந்தியாவிலும், வெளிநாட்டிலும் படித்ததினால், இரு இடங்களிலுமான கல்விமுறை குறித்து நான் அறிந்துள்ளேன். அந்த வகையில் ஹீரோ, இந்தியாவின் இன்றைய கல்வி நிலையை அழுத்தமாக அலசும் படைப்பாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

சிவகார்த்திகேயனுடன் நடித்த அனுபவம் குறித்து அவர் பேசும் போது, ‘சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனம் கொண்ட ஒரு மனிதர். அனைவரையும் அன்பாகக் கவனித்துக் கொள்வார். ஒரு நல்ல நடிகர் என்பதையும் தாண்டி அவருக்குள் ஒரு திறமையான இயக்குநர் மறைந்திருக்கிறார். ஒரு நாள் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹீரோ திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top