தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஜோடியாக வலம் வரும் சூர்யா ஜோதிகாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் சூர்யா ஒரு முன்னணி நடிகராக வலம் வந்த நிலையில், பருத்தி வீரன் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர் அவரது தம்பி கார்த்தி. சூர்யாவுக்கு எந்த அளவு ரசிகர் பட்டாளம் உள்ளதோ அதே அளவு கார்த்திக்கும் ரசிகர்கள் உள்ளனர் என்றே சொல்லலாம்.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், தற்போது தம்பி படத்தில் நடித்துள்ளார். பாபநாசம் பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள இந்த படத்தில், கார்த்தியின் அண்ணியான ஜோதிகா அவருக்கு அக்காவாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சவுகார் ஜானகி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அக்கா - தம்பி இடையிலான பாச போராட்டத்துடன் குடும்ப சஸ்பென்ஸ் திரில்லர் உடன் உருவாகியுள்ள அந்த படம் கிறிஸ்துமஸ் பரிசாக வரும் 20ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ள நிகிலா விமல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தம்பி படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கின் போதே எனக்கும், கார்த்திக்கும் லிப்-லாக் சீன் எடுத்தார்கள். ஆனால், அந்த சீனில் நடிக்க கார்த்தி மிகவும் தயங்கினார்.
ஒரு வேளை அண்ணி ஜோதிகா முன்னால் எனக்கு முத்தம் கொடுக்க கார்த்தி தயங்கியிருக்கலாம். அப்போது ஜோதிகா தான் அவருக்கு தைரியம் கொடுத்து அந்த சீனில் நடிக்க வைத்தார் என நிகிலா விமல் தெரிவித்துள்ளார்.
0 Comments