மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் நடிகர் நடிகைகள் வலைத்தளத்தில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள். இது குறித்து ஏற்கனவே நடிகை குஷ்பு டுவிட்டரில் பிரதமர் மோடியையும் மத்திய மந்திரி அமித்ஷாவையும் கடுமையாக சாடினார்.
“நாட்டின் அமைதியை குலைக்கும் உத்தரவுகளை வெளியிட நீங்கள் யார்? இந்த நாடு மதசார்பின்மையில் வாழ்கிறது” என்றார். இதற்கு நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்தார். “இந்தியர்களுக்கு குடியுரிமை பறிக்கப்படுவதுபோல பேசி இருக்கிறார். அந்த பொய்யை நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து ஒழுங்காக தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
கஸ்தூரிக்கு குஷ்பு பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் மீண்டும் ஒரு டுவிட்டர் பதிவில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை குஷ்பு கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் சிலர் கருத்து பதிவிட்டனர். இந்த நிலையில் எச்.ராஜாவை விமர்சித்த குஷ்புவுக்கு நடிகை காயத்ரி ரகுராம் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, “பொய்யை தவிர உங்களிடம் என்ன இருக்கிறது. நீங்கள் சொன்ன பொய் பட்டியல் அனைத்தும் என்னிடம் இருக்கிறது. பொய் பேசும் உங்களை போன்றவர்களுக்கு புகலிடம் இல்லை” என்று சாடி உள்ளார். ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்த நடிகர் சித்தார்த்தையும் காயத்ரி ரகுராம் கண்டித்து இருந்தார்.
0 Comments