பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை!

பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை!

in Entertainment / Movies

இந்திப்பட நடிகரான குஷால் பஞ்சாபி லக்சயா, கால், சலாமியே இஸ்க் உள்பட பல இந்தி படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் பல டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார். மும்பை பாந்திராவில் செயின்ட் ஆண்ட்ருஸ் ரோட்டில் உள்ள அல்ஸ்டிக் உள்ள வீட்டில் குஷால் பஞ்சாபி வசித்து வந்தார்.

இந்தநிலையில், குஷால் பஞ்சாபிக்கு அவரது பெற்றோர் போன் செய்தனர். ஆனால் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் குஷால் பஞ்சாபி அவரது போனை எடுத்து பேசவில்லை. இதனால் நேற்று அதிகாலை 2 மணி அளவில் தனது மகனின் வீட்டுக்கு பெற்றோர் சென்று பார்த்தனர்.

அப்போது, குஷால் பஞ்சாபி வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் குஷால் பஞ்சாபியை அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குஷால் பஞ்சாபி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து, தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து போலீசார் தற்கொலை குறித்து விசாரணையை தொடங்கி வீட்டில் நடிகர் குஷால் பஞ்சாபியின் தங்கியிருந்த வீட்டின் அறையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அவர் கைப்பட எழுதி வைத்திருந்த 1½ பக்க கடிதம் சிக்கியது. அதில், எனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும் தனது சொத்துகளை பெற்றோர், மகன், சகோதரி ஆகியோர் பிரித்து கொள்ளும்படி அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தற்கொலை செய்து கொண்ட குஷால் பஞ்சாபிக்கு ஆட்ரே டோல்கன் என்ற ஒரு மனைவி, மகன் கியான் ஆகியோர் உள்ளனர். அவரது மனைவி அவரை பிரிந்து வெளிநாட்டில் வாழ்வதாக கூறப்படுகிறது. மனைவியின் பராமரிப்பில் மகன் கியான் உள்ளார். நடிகர் குஷால் பஞ்சாபியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குஷால் பஞ்சாபியின் மறைவுக்கு இந்தி திரையுலக நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top