பழம்பெரும் தெலுங்கு நடிகரும், பிரபல தெலுங்கு படங்களின் கதாசிரியருமான கோலபுடி மாருதி ராவ் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.
சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் சில தினங்களுக்கு முன்பு வழுக்கி கீழே விழுந்ததால் உடல் நலன் குன்றி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோலபுடி மாருதி ராவ், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்..
கோலபுடி மாருதி ராவ் 1939ம் ஆந்திராவில் பிறந்தவர். ஆந்திரா பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற இவர், தெலுங்கு திரையுலகில் கதாசிரியர், திரைக்கதையாசிரியர், நடிகர் என பலதுறைகளின் வித்தகராக இருந்தார். ஆந்திர அரசின் நந்தி விருதினை ஆறு முறைகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகினர்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
0 Comments