பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல்வரை சீரியலில் நடித்தவர் ப்ரியா பவானி சங்கர். சின்னத்திரையிலேயே லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்த பவானி சங்கர். பெரிய திரைக்கு வந்த பிறகு மேலும் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார்.
தற்போது, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி ஹிட்டான பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்க்கு ஜோடியாக நடித்துவருகிறார். மேலும், கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெரிய திரையில் மாஸ் ஹிட் இல்லையென்றாலும், அதிகமான ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார்.
சமூக வலைதளத்தில் ப்ரியாவை ஏராளமானோர் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் ப்ரியா தனது காதலரான ராஜவேலின் டுகாட்டி 1299 பைக்கை ஓட்டும் வீடிோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.
0 Comments