தமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் என்ற விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.
இவர் 2000 வெளியான இவரது தந்தை கமல் ,பாலிவுட் நடிகர் ஷாருகான் ஆகிவோர் நடித்த ஹேராம் என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். சிறு படத்தில் முதலே தாம் ஒரு பாப் சிங்கர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ள ஸ்ருதி பல பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.மேலும் தனது 6 வயதில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் ஸ்ருதி ஹாசன். 7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் ஸ்ருதி.
மேலும் பூஜை, சிங்கம் 3 ,புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அதற்கு முன்னர் 2009 இல் வெளியான லக் என்ற படத்தின் நடித்த மூலம் லக் கால் பதித்தார் ஸ்ருதி ஹாசன். இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காணமுடியவில்லை மேலும் இவரது தந்தை கமல்ஹாசன் இயக்கி நடித்து வந்த பல்ராம் நாயுடு படத்தில் இவர் நடிப்பதாக இருந்தது ஆனால் அந்த படமும் கைவிடப்பட்டதால் தற்போது அம்மணியை எந்த படத்திலும் காணமுடியவில்லை இருப்பினும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார் இதனை கண்ட ரசிகர்கள் பலரும் நீங்கள் மிகவும் ஒல்லியாக விட்டீர்கள் என்றும் நீங்கள் உங்களை பார்க்கவில்லை என்றும் பல்வேறு விதமான விமர்சனங்களை தெரிவித்திருந்தார்கள் இதனால் கொஞ்சம் கடுப்பு அடைந்த சுருதிஹாசன் சமீபத்தில் எடுத்த இரண்டு புகைப்படங்களை ஒப்பிட்டு ஒரு பதிவை போட்டுள்ளார. அதில் இதற்கு முன்னால் போட்டிருந்த பதிவை அடுத்து நான் இந்த பதிவை போட நினைத்தேன். நான் மற்றவர்களின் கருத்துக்காக வாழமுடியாது தொடர்ச்சியாக நான் குண்டாக இருக்கிறேன் என்றும் ஒல்லியாக இருக்கிறேன் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த இரண்டு புகைப்படமும் மூன்று தினங்களில் எடுக்கப்பட்டதுதான். என்னுடைய உடலை பார்த்துக் கொள்ள நான் கடினமாக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் உழைத்திருக்கிறேன்.
எனவே அந்த பயணத்தை நான் விவரிக்க முடியாது. இங்கே யாரும் அடுத்தவர்களின் நிலையைக் குறித்து முடிவெடுக்க பிரபலமானவர்கள் கிடையாது. இது என்னுடைய வாழ்க்கை இது கிடையாது. முகம் என்பதில் நான் மகிழ்ச்சியாக கூறுவேன். நான் ஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறேன். அதற்காக நான் அசிங்கப்பட இல்லை. அதனை நான் எப்போதாவது விளம்பரப்படுத்தி இருக்கிறேனா ? இல்லை அதற்கு எதிராக நான் இருக்கிறேனா ? கிடையவே கிடையாது நான் எப்படி வாழ வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. நாம் செய்யும் மிகப்பெரிய செயல் ஒருவரை எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொள்வதுதான். அன்பை பரப்புங்கள் என்னை நேசிக்க ஒவ்வொரு நாளும் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.
0 Comments