நடிகர் சித்தார்த்தா.. யார் அவர்? எந்த படத்தில் நடித்துள்ளார் என கேள்வி கேட்ட அமைச்சருக்கு ட்விட்டரில் நறுக்குன்னு பதில் கொடுத்துள்ளார் சித்தார்த். சித்தார்த்தின் பதிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சித்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அருவம் படம் தமிழகத்தில் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி நடிகர் சித்தார்த் அவரது ட்விட்டர் பக்கத்தில், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருப்பதை நினைத்து வெட்கப்படுவதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அவர் இடத்தில் இருந்து கொண்டு எப்படி அந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவிக்க முடிந்தது என கேள்வி எழுப்பியிருந்தார்.
இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடன், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, நடிகர் சித்தார்த் யார்? எந்த படத்தில் நடித்துள்ளார் என நக்கலாக கேள்வி எழுப்பியதுடன், விளம்பரத்திற்காக கேள்விகளை வைப்பதாகவும், அவர்களை பெரிய ஆளாக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமைச்சரின் இந்த பேச்சுக்கு நடிகர் சித்தார்த் நறுக்கென்று பதிலளித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில், நான் யார் என அவர் கேட்கிறார். கவலை இல்லை. 2014ல் சிறந்த நடிகர் விருதை 2017ல் எனக்கு அறிவித்தார்கள். ஆனால் அதை தற்போது வரை அரசு எனக்கு கொடுக்கவில்லை. விளம்பரத்திற்காக பேசவேண்டிய அவசியம் எனக்கில்லை. எனக்கு என்று ஒரு இடம் இருக்கிறது என்று கோபமாக ட்வீட் செய்துள்ளார். மேலும், நீங்கள் ஒன்றும் என்னை பெரிய ஆளா ஆக்க தேவையில்லை.. உங்கள் வேலையை மட்டும் செய்யுங்கள் என பதிலளித்துள்ளார். அவரது இந்த பதிவிற்கு ஆதரவாக பலரும் தொடர் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
0 Comments