சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகை வாணி கபூர்!

சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகை வாணி கபூர்!

in Entertainment / Movies

தமிழில் நடிகர் நானியின் ஜோடியாக ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் நடித்து பிரபலமானவர் வாணி கபூர். சமீபத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்து திரைக்கு வந்த ‘வார்’ இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். தற்போது ரன்பீர் கபூர், சஞ்சய்தத்துடன் ‘ஷாம்ஷேரா’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் சர்ச்சை புகைப்படங்களை வெளியிட்டு எதிர்ப்புகளில் சிக்கும் நடிகைகள் பட்டியலில் தற்போது வாணி கபூரும் இணைந்துள்ளார். தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிகினி போன்ற கவர்ச்சி மேலாடை அணிந்த புகைப்படம் ஒன்றை பதிவேற்றி இருந்தார். அந்த மேலாடையில் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா என்ற வாசகம் இருந்தது.

புகைப்படத்தின் கீழ் வாழ்க்கையை மிகவும் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ள வேண்டாம். இங்கு யாருமே உயிருடன் இருக்கப் போவதில்லை என்ற வாசகத்தை பதிவிட்டு இருந்தார். அதைப் பார்த்த வலைத்தளவாசிகள் வாணிகபூரை கடுமையாக கண்டித்தனர்.

புகைப்படத்தை வலைத்தளத்தில் இருந்து நீக்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர். வாணி கபூருக்கு மிரட்டல்களும் வந்தன. இதைத்தொடர்ந்து சர்ச்சையான அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கி விட்டார். ஆனால் முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கவில்லை.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top