திரையுலகில் காதல் ஆசையால் அதிகமாக ஏமாறுவது நடிகைகளாக தான் இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு பிரபல அரசியல் வாரிசு நடிகரால் என்னுடைய வாழ்க்கையை இழந்தேன் என்று நடிகை ஆண்ட்ரியா கூறி அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார்.
சில, பல காதல் தோல்விகளால் நடிகை நயன்தாராவின் வாழ்க்கையில் ஏகப்பட்ட சறுக்கல்கள். இப்போது சறுக்கல்களில் இருந்து மீண்டு, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகை இலியானா, பிரபல நடிகர் ஒருவரைக் காதலித்ததாகவும், அந்த காதல் கைக்கூடவில்லை என்றும் கூறி அதிர்ச்சியளித்திருக்கிறார். இது பற்றி நடிகை இலியானா கூறியதாவது.. என்னுடன் படத்தில் நடித்த ஹீரோவை தீவிரமாக காதலித்து வந்தேன். பல மாதங்களாக நல்ல நட்புடன் நாங்கள் இருந்தோம். பல முறை ஒன்றாக டேட்டிங் சென்றுள்ளோம். ஆனால் அந்த காதல் கைகூடவில்லை
இப்போது வெளிநாட்டுக்காரரை காதலிக்கிறீர்களா என கேட்கிறார்கள்.
என்னுடைய சொந்த வாழ்க்கை பற்றி எனது பெற்றோருக்கு தெரியும். அவர்களுக்கு மட்டும் எல்லாம் தெரிந்தால் போதும் என்று நினைக்கிறேன். நான் திமிர் பிடித்தவள் என்கிறார்கள். அது பற்றி யார் எது சொன்னாலும் கவலையில்லை. முதல் படத்துக்கு மட்டுமே டெஸ்ட் ஷூட்டில் பங்கேற்றேன். எல்லா படங்களுக்கும் டெஸ்ட் ஷூட்டில் நான் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றவர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப என்னால் ஆட முடியாது. என் மனம் என்ன சொல்கிறதோ அதன்படி மட்டுமே நான் வாழ்வேன் என்றார்.
0 Comments