புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவியைக் காணவில்லை என செய்திகள் நேற்றிலிருந்து மிக வேகமாகப் பரவி வந்தது. புஷ்பவனம் குப்புசாமியின் மூத்த மகளுக்கும் இளைய மகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் கோபமடைந்த மூத்த மகள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக காவல்துறையில் கௌசிக் என்பவர் புகார் அளித்ததாக செய்திகள் வெளியாகின.
தமிழ் சினிமாவிலும் கலை உலகிலும் பிரபலம் பெற்றவர் குப்புசாமி என்பதால் இந்தச் செய்தி காட்டுத் தீப்போல் பரவியது. நிலைமையை உணர்ந்த குப்புசாமியின் மகள் பல்லவி தனக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவும் விமர்சிக்கப்பட்டதால் இன்று ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் தான் வீட்டில் தான் இருப்பதாகவும், ஊரில் இல்லாத அப்பா எப்படி காவல் நிலையம் சென்று புகார் கொடுத்திருப்பார் என்று தனக்கு புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும், தயவு செய்து தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் கெட்டகொண்டுளோர்.
அதே சமயம் இந்தப் போலிச் செய்தியை பரப்பியவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் அந்த வீடியோவில் அவர் பேசி இருந்தார். வீட்டில் இருக்கும் நபரை காணவில்லை எனப் புகாரளித்தது மூலம் பல்வேறு வகையான போலிச் செய்திகள் உலா வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments