பிரபல தமிழ் திரைப்பட மற்றும் கிராமியப் பாடல்களை பாடும் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி என்பது தெரிந்ததே. இவருடைய மனைவியும் ஒரு பாடகியாவார். இருவரும் இணைந்து பல இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி உள்ளனர். மேலும், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களிலும் பாடி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி திடீரென காணாமல் போனதாக சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து போலீசார் பல்லவியை தேடிவருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் பல்லவியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உறவினர் மற்றும் தோழியின் வீட்டில் தங்கியிருக்கின்றாரா? என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.
0 Comments