22 வயது இளைஞரை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள் கைது!

22 வயது இளைஞரை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள் கைது!

in News / National

மும்பையில் ஒரு இளைஞரை, நான்கு ஆண்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் உணவு உண்பதற்காக உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். உண்பதற்கு முன் உணவகத்தின் முன் நின்று செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அதை பார்த்த சிலர் அவர் பகிர்ந்துள்ள புகைபடத்தின் பின்னணியில் இருந்த உணவகத்தில் பெயர் பலகையை பார்த்து, அதில் இருந்த முகவரியை கண்டுபிடித்து , அவர் இருந்த உணவகத்திற்கு சென்றனர். அங்கு சென்ற நான்கு நபர்களும் அவரிடம் சென்று அவரை இன்ஸ்டாவில் பாலோ செய்வதாகவும், அவரது தீவிர ரசிகர்கள் என கூறியும் அந்த இளைஞரோடு புகைப்படம் எடுத்துள்ளனர். பின்னர் அந்த இளைஞரை அவர்களோடு பைக்கில் வருமாறும் அழைத்துள்ளார். நடக்கவிருக்கும் விபரீதத்தை உணராமல் ஆண்கள் தானே என நினைத்து அவர்களோடு சென்றுள்ளார். சரியாக 20 நிமிடங்கள் களைத்து மும்பை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு பக்கத்தில் சென்று நின்றதும் அந்த நால்வரும் அந்த இளைஞரை கட்டாயப்படுத்தி அங்கி நின்ற ஒரு காரில் ஏற்றியுள்ளார்.

பின்னர் அந்த நான்கு பெரும் சேர்ந்து ஓடும் காரிலேயே அந்த இளைஞரை 4 மணிநேரம் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்த இளைஞரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி காருக்கு பெட்ரோலும் போட்டதோடு, அவர்கள் செலவிற்கு பணமும் எடுத்துள்ளார். பின்னர் மறுநாள் அதிகாலையில் அந்த இளைஞரை நடுரோட்டில் இறக்கி விட்டு விட்டு சென்றுள்ளனர்.

உடனடியாக அந்த இளைஞர் தன்னுடைய பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து, அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். வி.பி நகர் காவல்நிலைய போலீசார் இதுசம்பந்தமா சட்டப்பிரிவு 377 ஆம் பிரிவின் படி வழக்குப்பதிவு செய்து அந்த 4 போரையும் கைது செய்தனர்.

அதில் ஒருவன் 18 வயது நிரம்பாத சிறுவன் என்பதால் அவனை மட்டும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர். மற்ற மூவரையும் சிறையில் அடைத்துள்ளனர். இந்தியாவின் முக்கியமான நகரமான மும்பையில் இளைஞர் ஒருவரை கடத்தி நான்கு பேர், பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்து உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top