மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக ராஜஸ்தானில் கோடா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் டிசம்பர் மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் பலியாகி உள்ள சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோடா பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்றில் குழந்தைகள் அதிக அளவில் உயிரிழப்பதாக புகார்கள் தொடர்ந்து வந்தன. இதையடுத்து, மருத்துவமனையில் குழு அமைத்து விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை குழுவின் ஆய்வு அறிக்கையில், கோடாவின் ஜெ.கே.லோன் மருத்துவமனையில், 2014 ம் ஆண்டில் 1198 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அதிலும், டிச.,23 மற்றும் 24 ஆகிய நாட்களில் மட்டும் பிறந்த 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. சராசரியாக நாள் ஒன்றிற்கு 3 குழந்தைகள் பிறந்த உடன் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இல்லாததும், தொற்று பாதிப்பு உள்ளிட்டவைகளே உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால், உடல்நிலை மிக மோசமான நிலையில் குழந்தைகள் கொண்டு வரப்படுவதே உயிரிழப்பிற்கு காரணம் என மருத்துவமனை சார்பில் கூறப்படுகிறது. ஆனால், மருத்துவமனையின் காரணத்தை ஏற்க ஆய்வுக்குழு மறுத்துள்ளது.
மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவின் காரணமாகவே குழந்தைகள் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது, விசாரணை குழுவின் ஆய்வறிக்கை வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 Comments