நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தூக்கு கயிறுகள் தயார்!

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தூக்கு கயிறுகள் தயார்!

in News / National

பல நாடுகளில் மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டாலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இன்னும் மரண தண்டனை வழங்கும் முறை தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தூக்கு கயிறு மூலம் தொங்க விட்டு கொல்லும் பழக்கம் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடைசியாக 2013ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் பயங்கரவாதி அப்சல்குரு தூக்கில் போடப்பட்டார். கடந்த 6 ஆண்டுகளாக யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் பீகார் மாநிலம் பக்சர் என்ற இடத்தில் உள்ள சிறை நிர்வாகத்துக்கு 10 தூக்கு கயிறுகளை தயாரித்து தரும்படி உத்தரவு வந்துள்ளது. பெரும்பாலான சிறைகளில் கைதிகளை தூக்கில் போடுவதற்கான வசதி இருந்தாலும் ஒருசில சிறைகளில் மட்டுமே இந்த வசதி உள்ளது. கயிறு தயாரிக்க விசே‌ஷ விசைத்தறி எந்திரம் ஒன்றும் சிறையில் உள்ளது. ஒரு கயிறு தயாரிப்பதற்கு 7,000 நூற்கண்டுகள் தேவைப்படுகிறது. தூக்கு கயிறின் மொத்த எடை 150 கிலோ வரை இருப்பது உண்டு உள்ளிட்ட விசே‌ஷ முறையில் இந்த கயிறு தயாரிக்கப்படுவதாக பக்சர் சிறைத்துறை அதிகாரி விஜய் குமார் தெரிவித்தார். ஹைதராபாத் பெண் மருத்துவரை கொன்ற குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்டிருக்கும் எதிரொலியாக நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கான தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில் பீகாரின் பக்சர் சிறை நிர்வாகத்துக்கு தூக்கு கயிறு தயாரிக்க உத்தரவு வந்துள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top