பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்தவர் ஆவார். இவர் தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
அப்துல் கலாம், ஜெயலலிதா, கருணாநிதி… மூவரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை விரைவாகவும் பொறுப்பாகவும் செய்தவர் இந்த அமுதா ஐ.ஏ.எஸ் தான். மதுரையை சேர்ந்த இவர், அப்பகுதியில் உள்ள வேளாண் கல்லூரியில் பி.எஸ்ஸி, அக்ரி படித்தார். சிவில் சர்வீஸ் எழுதி ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று பின், 1994ஆம் ஆண்டு தமிழக அளவில் ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பெற்றார்.
0 Comments