காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ராணுவ தரப்பில் இருந்து அவ்வப்போது அத்துமீறிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஷ்மீரின் ராம்பூர் செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.
நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ அதிகாரி ,ஒரு பெண் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் காயம் அடைந்தனர்.
இதேபோல், உரி எல்லையில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments