உத்தர பிரதேச மாநிலத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு நவம்பர் 9-ந் தேதி முதல் நவம்பர் 11-ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவின் 10 மாவட்டங்களிலும் பிரிவு 144 விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் மற்றும் கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாவதையொட்டி அயோத்தி, மதுரா, வாரணாசியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியாக உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே 144 தடை அமலில் உள்ளது.
மேலும் அயோத்தி தீர்ப்பு வெளியாவதையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது.
மேலும் தீர்ப்பு வெளியாவதையொட்டி தமிழகத்தில் 15 மையங்களில் நடைபெற்றுவந்த காவலர் உடற்தகுதித் தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது
0 Comments