குடிபோதையில் பிடிபட்டால் கிராமதிற்கே கறி விருந்து - குஜராத்  கிராமத்தில் வினோத தண்டனை!

குடிபோதையில் பிடிபட்டால் கிராமதிற்கே கறி விருந்து - குஜராத் கிராமத்தில் வினோத தண்டனை!

in News / National

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அமிர்காத் தாலுகாவில் உள்ளது பழங்குடி காதிசிதாரா கிராமம். கிராமத்தில் உள்ளவர்களில் பலர் மதுவுக்கு அடிமையானர்கள். அதனால், குடித்து விட்டு கிராமத்தில் உள்ளவர்களுக்கு தொல்லை கொடுக்க தொடங்கினர். மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால் கிராமத்தில் மோதல்கள் மற்றும் கொலைகள் அதிகரித்தன.

இதைத்தொடர்ந்து 2013-14 ஆம் ஆண்டில் கிராம பெரியவர்கள் ஒன்று கூடி குடிபோதையில் வந்தால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தனர்.

யாராவது குடிபோதையில் பிடிபட்டால் அவருக்கு ரூ .2,000 அபராதம் விதிக்கப்படுகிறது. ஒரு குடிகாரன் மோதலை உருவாக்கினால் அபராதம் 5,000. மேலும் 750-800 பேர் கொண்ட கிராமத்திற்கு அவர் ஆட்டுக் கறி விருந்து வைக்க வேண்டும் இதற்கு ரூ .20,000 வரை செலவாகும். இந்த அபராதம் குடிகாரர்களின் எண்ணிக்கை குறைவுக்கு வழிவகுத்தது. "குடித்துவிட்டு கடைசியாக மோதலில் ஈடுபட்டவர் நஞ்சி துங்கைசா என்பவர் ஆவார். இவர் வேறு கிராமத்திலிருந்து வந்தவர், என கிராம பஞ்சாயத்து தலைவர் கிம்ஜி துங்கைசா கூறி உள்ளார்.

இதைத் தொடர்ந்து அந்த கிராமத்தில் கட்டுப்பாடு உருவாகியது. குடித்து விட்டுவந்து யாரும் தகராறு செய்வது இல்லை.

ஆரம்ப ஆண்டுகளில் சராசரியாக மூன்று முதல் நான்கு நபர்கள் பிடிபட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டில் ஒருவர் மட்டுமே குடிபோதையில் பிடிபட்டார். அதே நேரத்தில் 2019 ஆம் ஆண்டில் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று கிராமவாசிகள் கூறுகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top