ஐதராபாத்தில் பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான குற்றாவளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஐதராபாத்தில் மிக மோசமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடுமையாக கொலைச் செய்யப்பட்ட இளம் மருத்துவர் ப்ரியங்காவின் வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரையும் போலீசார் என்கவுண்டர் செய்தனர். இச்சம்பவத்திற்கு பொதுமக்கள், சினம் பிரபலங்கள், அரசியல் வாதிகள் என அணைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், குற்றவாளிகளை சுட்டுக்கொன்றுள்ள தெலங்கனா காவல்துறைக்கு நாடு முழுவதிலுமிருந்து பாராட்டு குவிந்து வருகிறது.
இந்நிலையில் ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தெலங்கானா என்கவுன்டரில் நேரடியாக ஈடுப்பட்ட போலீஸார் அனைவருக்கும் ரொக்க பரிசு வழங்க போவதாக அறிவித்துள்ளார். Raah Group Foundation என்ற நிறுவனத்தின் தலைவரான நரேஷ் செல்பார் என்ற தொழிலதிபரே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஹைதராபாத் காவல்துறை" செய்துள்ளது பெரிதும் பாராட்டிற்குரியது. எனவே என்கவுன்டரில் நேரடியாக ஈடுபட்ட அனைத்து காவல்துறையினருக்கும் தலா ரூ .1 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவிக்கிறேன். மேலும் ஹரியானா மாநிலத்தில் உள்ள சிறுமிகளுக்கு தற்காப்பு வகுப்புகளை வழங்கும் திட்டம் கொண்டு வந்தால், அதற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக உள்ளேன் என நரேஷ் செல்பார் கூறியுள்ளார்.
0 Comments