பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் சேவையை, 4ஜிக்கு மேம்படுத்தும் பணிக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கிழக்கு கால்வான் பகுதியில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, பி.எஸ்.என்.எல்-ன் மேம்பாட்டு பணியில் சீன பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
அதைதொடர்ந்து தற்போது, சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை, தொலைதொடர்புத்துறை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மேம்படுத்துதல் பணிக்கான தேவையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, இந்திய நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு வாரங்களில் புதிய டெண்டர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0 Comments