நீட் நுழைவு தேர்வுக்கு 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் : உச்ச நீதிமன்றம்

நீட் நுழைவு தேர்வுக்கு 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் : உச்ச நீதிமன்றம்

in News / National

பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் ‘நீட்’ எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் நீட் தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 30 வயது வரை அனுமதிக்கப்படும் நிலையில், பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், காலக்கெடுவை ஒருவார காலத்திற்கு நீட்டிக்கவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top