உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை தரப்படும் என்று ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடியாக அறிவித்துள்ளார்.முன் எப்போதும் இல்லாத வகையில் 2 வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தாக்கம் உச்சத்தில் உள்ளது. இன்று 4,985 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.
ஒட்டு மொத்தமாக 1,75,678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 3,861 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பலி எண்ணிக்கை 2,551 ஆக உயர்ந்துள்ளது.இந் நிலையில், உதகையில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
தனிமனித இடைவெளியை பின்பற்றாத தனி நபர்கள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.
0 Comments