மதிப்பெண்ணிற்காக ஆய்வகத்தில் சீரழிக்கப்படும் கல்லூரி மாணவிகள்.. அமைச்சரின் கல்லூரியில் அவலம்?

மதிப்பெண்ணிற்காக ஆய்வகத்தில் சீரழிக்கப்படும் கல்லூரி மாணவிகள்.. அமைச்சரின் கல்லூரியில் அவலம்?

in News / National

ஹைதராபாத்தில் உள்ள பிரபல இன்ஜினியரிங் கல்லூரியில் ஆய்வக கூடத்தில் வைத்து மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஆய்வக அலுவலரே இந்த கொடூரத்தை அரங்கேற்றிய அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனையடுத்து அந்த மாணவி பெட்பாஸீர்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் அதே கல்லூரியில் படிக்கும் இரண்டாமாண்டு மாணவியை ஆய்வாக அலுவலர் தனியாக அழைத்து மதிப்பெண் குறித்து பேச வேண்டும் என அழைத்துள்ளார். அந்த பெண்ணும் அவர் கூறுவதை உண்மையென நம்பி சென்றுள்ளார். அந்த மாணவியையும் அவர் ஆய்வகத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதை வெளியே சொன்னால் மதிப்பெண் குறைக்கப்படும் என அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவம் வெளியே தெரியவர மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியும் பயமும் ஏற்பட்டது. இந்த கல்லூரி அம்மாநில அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில், விசாரணை நடத்தும் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top