இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையம் (UIDAI), ஆதார் அட்டையில் ஏற்படும் சிக்கல்கள் குறித்த புகார்களை, அவர்களின் வலைதளம் மூலம் பதிவு செய்யும் முறையை தற்போது வெளியிட்டுள்ளது.
இன்றைய இந்தியாவில், ஆதார் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆவணத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது மிகவும் அவசியமாகும்.
இந்நிலையில், ஆதார் புகார்களை ஆன்லைனில் எவ்வாறு தாக்கல் செய்வது என்பதிற்கான சில வழிமுறைகளை குறிப்பிட்டுள்ளது இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையமான உதய்.
1. www.uidai.gov.in என்ற வலைதளத்திற்கு சென்று, "தொடர்பு மற்றும் ஆதரவு" என்ற செயல்முறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. அதன் பிறகு, "புகார் தாக்கல்" என்ற செயல்முறையை அழுத்தவும்.
3. இதை தொடர்ந்து திறக்கப்படும் ஓர் புது வலைதளப்பக்கத்தில், பெயர், முகவரி, பதிவு ஐடி, மொபைல் எண், நகர், ஊர், மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் போன்ற விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
0 Comments