மதுரையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி தற்கொலை செய்து கொள்ள முயன்றதில் மனைவி இறந்து போனார். கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை ஜீவா நகர் பகுதியில் உள்ள லட்சுமிபுரம் தெருவில் பாலகிருஷ்ணன், உமாதேவி தம்பதி வசித்து வந்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையை சேர்ந்த இவர்கள் இருவரும் 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கார்பென்டராக வேலை பார்த்து வந்த பாலகிருஷ்ணன் உமாதேவி 16 வயதாக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால், போக்சோ சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர், உமாதேவிக்கு 18 வயதான பின்னர் இரு வீட்டாரும் சேர்ந்து பேசி காதல் ஜோடியை சேர்த்து வைத்துள்ளனர்.
தொடர்ந்து, 5 மாதங்களுக்கு முன்பு மதுரையில் குடியேறியுள்ளனர். இந்த நிலையில், சில தினங்களாக தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவும் இரண்டு பேரும் சண்டையிட்டுள்ளனர். இதனால், மனவேதனை அடைந்த உமாதேவி கணவர் உறங்கிக் கொண்டிருந்த போது தூக்கு மாட்டி கொண்டு இறந்து போனார். பால கிருஷ்ணன் கண் விழித்து பார்த்த போது, மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வேதனையில் தன் கழுத்தில் உளியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஜெய்ஹிந்புரம் போலீசார் உமா தேவியின் பிரேதத்தை கைப்பற்றி உடல்கூராய்வுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விவரம் தெரியாத வயதில் திருமணம் செய்து வைத்து, புரிதல் இல்லாமல் அடிக்கடி கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால், உமாதேவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை பல இடங்களில் காண முடிகிறது .
0 Comments