வேறு சாதி வாலிபரை காதலித்ததால், மகளை கொன்று கூறுபோட்ட தந்தை கைது!

வேறு சாதி வாலிபரை காதலித்ததால், மகளை கொன்று கூறுபோட்ட தந்தை கைது!

in News / National

தானே மாவட்டம் கல்யாண் ரெயில் நிலையத்திற்குள் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணி அளவில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் கருப்பு நிற பையுடன் வெளியே வந்தார். அவர், ஒரு ஆட்டோவில் ஏறி பிவண்டி பகுதியில் உள்ள கோவா நாக்கா பகுதிக்கு செல்லவேண்டும் என கூறினார். அப்போது, அவர் வைத்திருந்த பையில் இருந்து துர்நாற்றம் வீசவே, . ஆட்டோ டிரைவர் அது குறித்து அந்த நபரிடம் விசாரித்தார். இதனால் பதற்றம் அடைந்த நபர், அந்த பகுதியில் பையை ரோட்டில் வீசிவிட்டு தப்பிஓடிவிட்டார்.

இது குறித்து ஆட்டோ டிரைவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் அந்த நபர் வீசிச்சென்ற பையை திறந்து பார்த்தனர். அப்போது, அந்த பைக்குள் பாதி அழுகிய நிலையில் தலையில்லாத பெண்னின் உடல் இருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, ரெயில் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பெண்ணின் உடலை வீசிச்சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், பெண்ணின் உடலை வீசிச்சென்றவர் டிட்வாலா இந்திரா நகரில் உள்ள சாய்நகர் சால் பகுதியை சேர்ந்த அரவிந்த் திவாரி(வயது47) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, அரவிந்த் திவாரி வீசிச்சென்றது அவரது மகளின் உடல் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

அரவிந்த் திவாரி அந்தேரியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறாா். இவருக்கு 4 பெண் பிள்ளைகள்.

இதில், மூத்த மகளான பிரின்சி(வயது22) தனியார் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்துள்ளார். மேலும் அவர் வேறு ஜாதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார். இது குறித்து தெரியவந்ததும் அரவிந்த் திவாரி கடும் கோபம் அடைந்தார். எனினும் அவர் முதலில் காதலை கைவிடுமாறு மகளிடம் அறிவுரை கூறியுள்ளார். பலமுறை கூறியும் பிரின்சி காதலித்த வாலிபரை தான் திருமணம் செய்வேன் என பிடிவாதமாக இருந்து உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அரவிந்த் திவாரி தனது மகள் பிரின்சியை கொடூரமான முறையில் கொலை செய்து உள்ளார்.

பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி கூறுபோட்டு உள்ளார். இதில், ஒரு பகுதி உடலை வீசிச்செல்ல தான் அவர் கல்யாண் ரெயில் நிலையத்தில் இருந்து பிவண்டி செல்ல முயற்சி செய்து உள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அரவிந்த் திவாரியை போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண்ணின் மற்ற உடல் பாகங்கள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை தேடிவருவதாக துணை போலீஸ் கமிஷனர் தீபக் தேவ்ராஜ் கூறினார்.

பெண்ணின் உடலை வீசிச்சென்ற வழக்கில் 30 மணி நேரத்தில் துப்பு துலக்கி கொலையாளியை பிடித்த போலீசாரை தானே போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் பாராட்டி அவர்களுக்கு சன்மானம் அறிவித்து உள்ளார்.

வேறு சமூக வாலிபரை காதலித்த மகளை தந்தையே கொலை செய்து உடலை கூறுபோட்டு வீசிய சம்பவம் மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top