பெண் மருத்துவரை கொன்ற 4 பேரை தூக்கிலிடுங்கள் - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பி விஜிலா சத்யானந்த்

பெண் மருத்துவரை கொன்ற 4 பேரை தூக்கிலிடுங்கள் - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பி விஜிலா சத்யானந்த்

in News / National

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து பின்னர் உடலை எரித்த நான்கு பேரை தூக்கில் போட வேண்டும் என்று மக்களவையில் அதிமுக எம்பி விஜிலா சத்யானந்த் ஆவேசமாக பேசினார். இதேபோல், மாநிலங்களவையில் பேசிய சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ஜெயா பச்சான், அவர்களை மக்கள் முன்னிலையில் அடித்துக் கொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் புறநகர் பகுதியில் கடந்த வியாழக்கிழமை பெண் கால் நடை மருத்துவர் (27) பிரியங்கா ரெட்டி, நான்கு பேர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

மக்களவையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆவேசமாக பேசிய அதிமுக எம்பி விஜிலா சத்யானந்த், ‘ பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நால்வரை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தூக்கிலிட வேண்டும். நாட்டில் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை’ என்றார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ஜெயா பச்சான், ‘பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்களால் நாட்டிற்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. இந்த வகையான நபர்களை (குற்றம் சாட்டப்பட்டவர்களை) பகிரங்கமாக பொதுமக்கள் முன்னிலையில் அடித்துக் கொல்ல வேண்டும்.’ என்று ஆவேசமாக பேசினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top