மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2020-2021க்கான பட்ஜெட் உரையின் சிறப்பு அம்சங்கள்:

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2020-2021க்கான பட்ஜெட் உரையின் சிறப்பு அம்சங்கள்:

in News / National

40 கோடி வர்த்தகர்கள் GST-யில் பதிவு செய்துள்ளனர்.

இதுவரை இல்லாத சாதனையாக, புதிதாக 16 லட்சம் வரி செலுத்துபவர்கள் சேர்ப்பு.

உலகிலேயே 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது.

வேளாண் துறையைப் போட்டிகள் நிறைந்ததாக மாற்றவும், வேளாண் சந்தையை தாராளமயமாக்கவும் 15 அம்ச திட்டம்.

பாசனத்திற்கான தண்ணீர் தட்டுப்பாடு உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

GST காரணமாக போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துத் துறையின் திறன் மேம்பட்டிருப்பதுடன், அதிகாரிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, குறு, சிறு, நடுத்தர தொழில்துறை நுகர்வோர்களும் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பயனடைந்துள்ளனர்.

வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகளுக்கு புவிசார் குறியீடும், வரைபடம் வாயிலாக கண்டறியும் வசதியும் ஏற்படுத்தப்படும்.

சுயஉதவிக் குழுக்கள் வாயிலாக கிராமங்களில் சேமிப்புக் கிடங்கு.

ஒரு மாவட்டத்திற்கு ஒரு வேளாண் உற்பத்திப்பொருள் என்ற புதிய நோக்கிலான திட்டம்.

வேளாண் கடனுக்கான நிதி ஒதுக்கீடு 15 லட்சம் கோடி.

வேளாண் துறைக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. ஊரக வளர்ச்சிக்கு 1.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.

இந்திர தனுஷ் திட்டம் விரிவாக்கம். கூடுதலாக 112 மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் அமைக்கப்படும்.

2025க்குள் நாட்டில் காச நோயை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டம்.

தூய்மை இந்தியா திட்டத்திற்கு 12,300 கோடி நிதி ஒதுக்கீடு.

புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். சிறந்த கல்வியை வழங்கும் வகையில், நேரடி அந்நிய முதலீடு, வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான கல்வித் திட்டம் அறிமுகம்.

வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் “இந்தியாவில் கல்விக் கற்க வாருங்கள்” திட்டம் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பிரபலப்படுத்தப்படும்.

மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும், கூடுதலாக மருத்துவர்களை நியமிக்கவும் திட்டம்.

கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

தேசிய தொழில்நுட்ப ரீதியிலான ஜவுளி இயக்கம் உருவாக்கம்.

தொழில்துறைக்கும், வர்த்தகத் துறைக்கும் 27,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

கட்டமைப்புத் துறைக்கு 100 லட்சம் கோடி ரூபாய் - 5 புதிய பொலிவுறு நகரங்கள் ஏற்படுத்தப்படும்.

புதிய கட்டமைப்புத் திட்டம் "நிர்விக்" அறிவிப்பு.

ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும்.

கூடுதலாக தேஜஸ் ரயில்கள் இயக்கப்படும்.

27,000 கிமீ தொலைவுக்கு ரயில்பாதை மின்மயமாக்கல்.

மின்சாரத் துறையில் புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை. 2023 ஆம் ஆண்டுக்குள் ப்ரீ-பெய்டு டிஜிட்டல் மீட்டர் வசதி அறிமுகம்.

குழாய் வழியே சமையல் எரிவாயு எடுத்துச் செல்லும் திட்டம் விரிவாக்கம், கூடுதலாக 16,200 கிமீ தொலைவுக்கு குழாய்கள் அமைக்க திட்டம்.

அனைத்து கிராமங்களுக்கும், ஃபைபர் நெட் வாயிலாக இணைய வசதி.

உடான் திட்டத்தின் கீழ், புதிதாக 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பழைய அனல் மின் நிலையங்களுக்கு கட்டுப்பாடுகள், அதிகளவு கரியமில வாயுவை வெளியேற்றினால் மூட நடவடிக்கை.

ஊட்டச்சத்து திட்டத்திற்கு 35,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

சுற்றுச்சூழலை பாதுகாக்க சுத்தமான காற்று இயக்கம்.
இத்திட்டத்திற்கு 44,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

பட்டியலினத்தவருக்கும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலத்திட்டங்களுக்கும் 85,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

பழங்குடியினர் நலனுக்கு 53,700 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு.

சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசு முன்னுரிமை, 25,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு முற்றிலும் தடை விதிக்க முடிவு.

ஜம்மு காஷ்மீருக்கு 30,757 கோடி ரூபாய் ஒதுக்கீடு. லடாக் மேம்பாட்டிற்காக 5,958 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

முதலீட்டாளர்களின் வைப்புத் தொகைக்கான காப்பீடு 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்வு.

எளிதில் அழுகும் தன்மையுள்ள விவசாய விளைபொருட்களை கொண்டு செல்ல ஏதுவாக இரயில்வே அமைச்சகத்தின் சார்பில் குளிர்சாதன வசதி செய்யப்பட புதிய கிசான் இரயில் இயக்கப்படும்.

விவசாய விளைபொருட்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் கொண்டு செல்ல விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் சார்பாக க்ரிஷி உதான் என்கிற புதிய விமானம் துவங்கப்படும்.

550 ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி.

தமிழ்நாட்டில் உள்ள பழமையான ஆதிச்சநல்லூர் அகழாய்வு இடத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

எல்ஐசியின் சில பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு SMART போன் வழங்கப்படும்.

தரிசு நிலங்களில் சூரிய உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கு ஊக்கம் அளிக்கப்படும்.

மத்திய அரசின் மலிவு விலை மருந்தகங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

பெங்களூரு -சென்னை புதிய எக்ஸ்பிரஸ் வழித்தடம் 2023 க்குள் முடிக்க நடவடிக்கை.

புதிதாக 5 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கம்.

பஞ்சாயத்து ராஜ் திட்டத்துக்கு ரூ.1.23 லட்சம் கோடி ஒதுக்கீடு!

2025-க்குள் பால் உற்பத்தியை இருமடங்காக உயர்த்த நடவடிக்கை.

ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை:ரூ.5 இல் இருந்து 7 .5 லட்சம் வரை வருமானம் உள்ள தனி நபர்களுக்கான வருமான வரி 20 % இருந்து 10 % ஆகா குறைப்பு.

7 .5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கான வருமான வரி 15 % ஆக குறைப்பு.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top