உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் விசாரணை, பல ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வந்தது.
சமீபத்தில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், 'சர்ச்சைக்குரிய அந்த நிலத்தில், ராமர் கோவில் கட்டலாம். முஸ்லிம்களுக்கு மசூதி கட்ட, உத்தர பிரதேச அரசு, அயோத்தி பகுதியிலேயே , 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அயோத்தி வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், மிஷாபுதீன், மவுலானா ஹஸ்புல்லா, ஹாஜி மெஹ்மூத் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், அயோத்தியில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக இந்து மகாசபை மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
0 Comments