உடலை அடக்கம் செய்த 2 நாட்களில், தான் உயிருடன் இருப்பதாக வந்து நின்ற கணவர்; அதிர்ந்த மனைவி!

உடலை அடக்கம் செய்த 2 நாட்களில், தான் உயிருடன் இருப்பதாக வந்து நின்ற கணவர்; அதிர்ந்த மனைவி!

in News / National

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை அடுத்த காலனெல்காஞ்சி எனும் பகுதியை சேர்ந்தவர் அகமது ஹாசன். இவர் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதியன்று தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். 3 நாட்களாகியும் அகமது ஹாசன் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது மனைவி போலீசாரிடம் ஹாசன் காணவில்லை என புகாரளித்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் உடல் கிடைத்துள்ளது. அது அகமது ஹாசன் தான் என உறுதி செய்த என அவரது உறவினர்கள், அந்த உடலை நல்லடக்கம் செய்தனர். இந்நிலையில் அனைவருக்கும் ஆதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. உடல் புதைக்கப்பட்ட 2வது நாளிலேயே அகமது ஹாசன் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அவரைக் கண்ட குடும்பத்தினர், இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அப்போதுதான் ஹாசனின் உறவினர்கள் புதைத்தது வேறு யாரோ ஒருவரின் உடல் என்பது தெரியவந்தது.

இது குறித்து தெரிவித்துள்ள அகமது ஹாசன், சில நாட்களுக்கு முன் எனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக வீட்டை விட்டு வெளியேறினேன். அப்படி வெளியேறிய போது, ஒருவர் எனக்கு உதவி செய்து வேலையும் கொடுத்தார். அதை செய்து முடித்து விட்டு அதற்கான பணத்தை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு திரும்பினேன். அப்போது எனது வீடு பூட்டப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் என்னை அடையாளம் கண்டு என்னை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அப்போது தான், நான் உயிரிழந்ததாக ஒருவரின் உடலை அடக்கம் செய்த தகவலை அறிந்து கொண்டேன். ஆனால் நான் தற்போது உயிரோடு இருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

ஒரு புறம் அகமது ஹாசன் உயிருடன் இருப்பதாக அவரின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தாலும், மறுபுறம் அவர்கள் அடக்கம் செய்த உடல் யார் என்பது குறித்து போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top