பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் குடும்பத்தினர் அறிக்கையின் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
லதா மங்கேஷ்கர் சுவாச பிரச்னை காரணமாக பாதிக்கப்பட்டு, அதனால், மும்பையில் உள்ள பிரீச்கேண்டி மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் வாட்சப்பில் அவர் இறந்து விட்டதாக வதந்தி ஓன்று பரப்ப பட்டது, இதனால் பிறரும் அதிர்ச்சி அடைந்தனர்.
0 Comments