சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவன பணியாளர்கள் சீன அதிபரின் வருகையை ஒட்டி தங்களது வீட்டிலிருந்து பணி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இன்றும் , நாளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதன் காரணமாக ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பிரதமர், சீன அதிபர் சந்திப்பு நடைபெறவுள்ளதால், சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவன பணியாளர்கள் இன்று தங்களது வீட்டிலிருந்து பணியை மேற்கொள்ள நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
0 Comments