பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் காஷ்மீர் மாநில ஆப்பிள் வர்த்தகர்கள்!

பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் காஷ்மீர் மாநில ஆப்பிள் வர்த்தகர்கள்!

in News / National

ஜம்மு காஷ்மீரின் வர்த்தகத்தில் முக்கிய பொருளாக கருதப்படும் ஆப்பிள்களில், கடந்த சில நாட்களாக, இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானிற்கு ஆதரவாகவும் சில கருத்துக்கள் எழுதப்பட்டு, சந்தைகளில் விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பயங்கரவாதிகளின் இந்த செயல்களுக்கு எதிராக காஷ்மீர் மாநில ஆப்பிள் வர்த்தகர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

ஆப்பிள் ஏற்றுமதிக்கு பெயர் போன மாநிலமான ஜம்மு காஷ்மீரில், கடந்த சில மாதங்களாக, பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களினால், ஏற்றுமதிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது, நிலைமை சீராகி வருவதாக கூறப்பட்டு ஏற்றுமதிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு விற்கப்படும் ஆப்பிள்களில், "இந்தியாவே திரும்ப செல்", "பாகிஸ்தான் பாகிஸ்தான்" "எங்கள் அன்புக்குரியவர் இம்ரான் கான்", "திரும்ப வாருங்கள் சாகிர் ம்யூசா" போன்ற வாக்கியங்கள் எழுதப்பட்டு தற்போது விற்கப்படுகின்றன.

பயங்கரவாதிகளின் இந்த செயல்களுக்கு எதிராக குரல் எழுப்பும் வகையில், பாகிஸ்தானை எதிர்க்கும் ரீதியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் காஷ்மீர் மாநில ஆப்பிள் வர்த்தகர்கள்.

கடந்த சில நாட்கள் முன்பு, ஆப்பிள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த ஆப்பிள் ஏற்றுமதியாளர் ஒருவர் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்ததும் கூட இவர்களின் இந்த கோபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top