கேரளா மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த பெண்ணான வித்யா, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே அவரது உடல் வீசப்பட்டது. இவரது சடலத்திற்கு உரிமைக்கோரி யாரும் வராத காரணத்தால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இவரது உடல் வள்ளியூர் போலீசாரால் புதைக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொலையை செய்ட்து வித்யாவின் கணவர் பிரேம்குமார் மற்றும் அவரது பள்ளி பருவத்தோழி சுனிதா பேபி ஆகியோர் என தெரியவந்தது..
இது தொடர்பாக விசாரணை நடத்திய கேரள மாநில போலீசார் இவருரையும் கைது செய்தனர். தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வித்யாவை கழுத்தை நெரித்துக் கொன்ற இருவரும் முகத்தை சிதைத்து வள்ளியூரில் வித்யாவின் உடலை வீசிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் ராதாபுரம் தாசில்தார் செல்வன் முன்னிலையில் கேரள மருத்துவக்குழுவினர் மற்றும் போலீசார், வித்யாவின் உடலை தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை செய்தனர்.
0 Comments