காதலுக்கு கண் இல்லை என்பார்கள். காதலுக்கு கண், காது, மூக்கு எல்லாம் இல்லாமல் இருந்தால் பரவாயில்லை. ஆனால் காதலர்களுக்கும் கண், காது உட்பட விவஸ்தையும் இல்லை என்று முகம் சுளித்து வருகிறார்கள் டெல்லி மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள்.
நம்மூர் மெரினா பீச், யாருமே போகாத திரையரங்குகள், பார்க் போன்ற இடங்களில் பட்டப்பகலிலேயே அத்துமீறும் காதல் ஜோடிகளைப் போல இவர்கள் ஒதுக்குப்புறமாக எல்லாம் போவதில்லை.
சுற்றிலும் சக பயணிகள் இருப்பதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சிறிதும் கூச்சம் இல்லாமல் உதட்டோடு உதடு கவ்வி முத்தமிட்டுக் கொள்கிறார்கள் காதலர்கள்.
அருகில் இருப்பவர்கள் கூச்சத்தில் நெளிந்து, அந்த இடத்தை விட்டு தள்ளிச் செல்கிறார்கள். அப்படி ஒரு பயணி, இந்த அக்கப்போரைப் பார்த்ததோடு மட்டுமல்லாமல் தன்னுடைய செல்போன் கேமிராவினால் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட ஒரே நாளில் செம வைரலானது வீடியோ.
இப்போது யாரும் அப்படியெல்லாம் மெட்ரோ ரயில்களில் செய்வதில்லை என்று தானே நினைக்கிறீர்கள்... அது தான் கிடையாது. இப்படி ஒரு வசதியிருக்கிறதா என்று வீடியோ ரிலீஸானப் பிறகு டெல்லி மெட்ரோவில் காதலர்களின் கூட்டம் அதிகரித்திருக்கிறதாம்.
0 Comments